நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது ஹிஜாப் சம்பந்தமான கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு, ஹிஜாப் தடை சம்பந்தமான வழக்கின் தீர்ப்பை இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இத்தீர்ப்பில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் எனவும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கடைபிடிக்க வேண்டிய அவசியமான கடமையில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
இத்தீர்ப்பு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்ட அடிப்படையில் வழங்க வேண்டிய தீர்ப்பை மீறி தொடர்ந்து நீதிமன்றங்க ஃபாசிச அரசின் கொள்கையை பரப்பும் மன்றங்களாக மாறி வருகின்றன.
இதற்கு கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட பல தீர்ப்புகளே சாட்சியாக உள்ளது.
இஸ்லாத்தில் எது கூடும் எது கூடாது என நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாத்தில் எது கூடும் எது கூடாது என்பதை இறைவனால் வழங்கப்பட்ட வேதமான குர்ஆன் மற்றும் அதை போதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் தெளிவபடுத்தியுள்ளனர்.
நீதிமன்றங்கள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே கட்டுபடுவார்கள். நீதிபதிகள் மனோஇச்சையின்படி வழங்கும் தீர்ப்புக்கு இந்தியர்கள் கட்டுபட மாட்டார்கள். இத்தீர்ப்பை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நிராகரிப்பார்கள். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் இத்தீர்ப்பை செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படும்.
இத்தீர்ப்பு நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் சூழலை ஏறபடுத்தியுள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை பெற ஜனநாயக வழியில் வலிமையான தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள்.
கண்டன அறிக்கை
சேப்பாக்கம் அப்துல்லாஹ்,
YMJ பொதுச் செயலாளர்.
-காதர் குறிச்சி.