கோவை மாவட்டம் ஆனைமலை தாலுக்கா சுப்பை கவுண்டன் புதூர் சுங்கம் பகுதியில் மதீனா மில் காம்பவுண்டுக்குள் நூல் மில் ஒன்று இயங்கி வந்தது. வழக்கம்போல் இன்று வேலை நடைபெற்று வந்த நிலையில் இயந்திரம் இயங்கும் போது ஏற்பட்ட தீப்பொறி அருகில் உள்ள கழிவு பஞ்சில் பற்றி தீப்பற்றி கொண்டது . சற்றும் எதிர்பார்க்காத நிலையில் ஏற்பட்ட இந்த தீ அருகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் பரவி பெரும் தீவிபத்து ஆக மாறியது.
சற்று நேரத்தில் அந்த இடம் முழுவதும் பரவி அணைக்க முடியாத வண்ணம் அனைத்து பொருட்களையும் ஆட்கொண்டு விட்டது பிறகு தீயணைப்புத்துறை வந்து தீயை அணைத்தனர் இதில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை பல லட்சம் மதிப்பிலான பொருள் எரிந்து நாசமானது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஆனைமலை பகுதி நிருபர்
-அலாவுதீன்.