சென்னை ஜிஎஸ்டி ரோட்டிலிருந்து பல்லாவரம் ரயில் நிலையம் செல்லும் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் புதிதாக தார் சாலை போடுவதற்கு என்று சாலையை பெயர்த்து போட்டு எட்டு மாத காலமாகியும். இன்றுவரை புதிய சாலை போடாமல் அப்படியே அதிகாரிகள் விட்டுவிட்டனர் இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலையும் காணப்படுகிறது. இதனை சரி செய்யும மாநகராட்சி நிர்வாகம் என்று பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முக்கிய சாலையான ரயில் நிலையத்திலிருந்து உடனடியாக வெளியேற இயலாத காரணத்தால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பயணிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.