தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் காரணமாக, பஸ்கள் ஓடாததால், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று முதல், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அரசு பஸ் முற்றிலும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று, 70 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர். மருதமலை பஸ் டிப்போவில், மொத்தமுள்ள, 36 பஸ்களில், 4 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. பஸ்கள் ஓடாததால், ஆட்டோவில் மக்கள் அதிகமாக பயணித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.