மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாகவும் தன்னந்தனியாக நின்று சாதனை படைத்த 9பெண் சாதனையாளர்களுக்கு கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்விகுழுமம் சார்பில் திவ்யலட்சுமி விருதுகள் வழங்கபட்டது.
கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமங்கள் சார்பில் கடந்த் 2020 முதல் திருமதி திவ்யலட்சுமி விருதுகள் கல்வி, விளையாட்டு, அரசு, சமுகம், மருத்துவம் போன்ற ஒவ்வொரு துறைகளில் சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கபடுகிறது. இன்னிலையில் திவ்யலட்சுமி மூன்றாம் ஆண்டாக பல்வேரு துறைகளில் சாதனை படைத்த 9 பெண் சாதனையாளர்களுக்கு இன்று வழங்கபட்டது. கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்
பேச்சாளரும், 19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் குழுவின் தளபதியாக திருமதி. ப்ரீத்தி சீனிவாசன், சமுக செயற்பாட்டாளர் திருமதி.திரிஷாபிரபு, கல்லறை காப்பாளர் சீதா, சமுக சேவகர் ஷீபா அமீர், ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (டிஎன்எஸ்டிசி) யின் நிர்வாக இயக்குநருமான இன்னசெண்ட் திவ்யா, மாநில குற்றப்பதிவு பணியக ஆய்வாளர் ஏ.எஸ்.தாஹிரா, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி தளபதி பிரசன்னா இடையில்லியாம், சமூக சேவகர் டிஃபனி ப்ரார் மற்றும் முதல் இந்திய பெண் தீயணைப்பு அதிகாரி
மீனாட்சி விஜயகுமார் உள்ளிட்ட 9 பெண் சாதனையாளருக்கு கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ பக்தவச்சலம் மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி குழுமங்களின் தலைவர் அசோக் பக்தவச்சலம் திவ்யலட்சுமி விருதினை வழங்கி சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அசோக் பக்தவச்சலம் கூறும்போது கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமம் நிர்வாகத்தை கட்டி காத்தவரும் தனது மனைவியுமான திவ்யலட்சுமியின் பெயரால் அவர் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாகவும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் கடந்த 2020 முதல் இவ்விருது வழங்கபட்டு வருவதாகவும், பல்வேரு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கெளரவிப்பதன் மூலம் தன் மனைவியை நினைவு கூறுவதாகவும் தெரிவித்தார். விழா தொடங்கும் முன்னதாக கல்லூரி மாணவிகளின் சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
– சீனி,போத்தனூர்.