மாடு அறுவை மனையின்
அடிப்படை வசதிகளை அஸ்லாம் பாஷா ஆய்வு செய்தார்.
அடிப்படை வசதிகள்:
கோவை உள்ளாட்சிக்கான தேர்தல் முடிவடைந்து மார்ச் 2ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றார்கள். அதை தொடர்ந்து கவுன்சிலர்கள் தொகுதியில் பணிகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கோவை 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா தனது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிக்கும் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அரசு அலுவலகங்களில், நியாயவிலை கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
செட்டிபாலையம் ரோட்டில் அமைந்துள்ள மாடு அறுவைமனையின் சங்க தலைவர் ஜக்ருதீன், செயளாளர் கோல்கேட் ரஃபி மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் அடிப்படை பிரச்சினையான தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை சீர் ஆமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்,
அதனை ஆய்வு கொண்ட மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா விரைவில் சீரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சையத் காதர்.