கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நடந்த முக்கிய இடங்கள் சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ வீடு, எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வீடு,
வடவள்ளியில் உள்ள புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் வீடு,வடவள்ளியில் உள்ள கன்ஸ்டோல் மால் குட்ஸ் நிறுவன பங்குதாரர் சந்திரபிரகாஷ் வீடு,வடவள்ளி சக்தி நகரில் உள்ள என்ஜினீயர் சந்திரசேகரின் தங்கை விஜயலட்சுமி வீடு,பீளமேடு ஆவாரம்பாளையத்தில் உள்ள கூடுதல் டி.எஸ்.பி அனிதா வீடு,சேரன் மாநகரில் உள்ள மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. வீடு,அன்னூரில் உள்ள இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா வீடு,
தொண்டாமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான பண்ணை வீடு,தொண்டாமுத்தூரில் உள்ள கார்த்திகேயன் என்பவரது வீடு, வீரகேரளத்தில் உள்ள வக்கீல் நவீன்குமார் வீடு,பி.என் புதூரில் உள்ள கிருஷ்ணவேணி என்பவரது வீடு,பொள்ளாச்சியில் உள்ள மகா கணபதி நகைக்கடை,எட்டிமடையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் வீடு,
சூலூர் முதலிபாளையத்தில் உள்ள கந்தவேல் என்பவரது வீடு, கோவை புதூரில் உள்ள தொழில் அதிபர் ஜே.ஆர். ராஜேந்திரன் என்பவரது வீடு மற்றும் அலுவலகம்,பொள்ளாச்சி ஜீவா நகரில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் என்பவரது வீடு,
கோவை லட்சுமி சிக்னல் அருகே உள்ள கிருஷ்ணா கல்லூரி நிர்வாக இயக்குனர் மலர்விழி அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.