வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகர் துறையின் சார்பில் விவசாயிகள் பயிற்சி கொல்லபட்டி கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆதார விலை கொள்முதல் திட்டத்தின் கீழ் ரூ 105.60 க்கு கொப்பரை அரசால் கொள்முதல் செய்வது குறித்தும் , உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் தென்னை சம்பந்தமான உணவு தயாரிக்கும் தொழில் கூடத்திற்கு 35% மானியம் வழங்குவது, கிடங்கு மற்றும் களம் அமைக்க மானியம் வழங்குவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கொல்லபட்டி திராவிட முன்னேற்றக் கிளை கழக செயலாளர் திரு. S.S.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். ஒழுங்குமுறை விற்பனைத் துறை கண்காணிப்பாளர் திருமதி.ப.வாணி, வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் R.சுந்தர்ராஜன் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் வேளாண்மை உதவி அலுவலர் M.B.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன்.