கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சிக்கான தேர்தலில் அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட கோவை மாவட்டத்தை அதிமுகவிடம் இருந்து திமுக கைபற்றியது, கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து 29-03-2022அன்று நடந்த மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 2 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மற்றும் நிலைக்குழ தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 9 உறுப்பினர்களை கொண்ட பொது சுகாதார நிலைக்குழுவில் 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா பொது சுகாதார குழ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– செய்யது காதர் குறிச்சி.