அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆய்வு
கோவை மாவட்ட 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா சித்தன்னபுரம், கோனவாய்கால் பாளையம் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு பாய்கள்,உணவு தட்டுகள்,டம்ளர், போன்ற பொருட்களும் தண்ணீர் ஏற்றுவதற்கு மிண் மோட்டர் போன்ற பொருட்களை 99வது வார்டு கவுன்சிலர் மு.அஸ்லாம் பாஷா பள்ளி தலைமை ஆசிரியர்யிடம் வழங்கினார்,அது சமயம் வட்ட பொருப்பாளர் முஹம்மது ஜின்னா, ஜாஷகான்,அஷ்ரப்,காதர்,சுலைமான்,பிரேம்,ஃபைசல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சையது காதர் குறிச்சி.