ஆனைமலையில் நகரப் பகுதியின் அருகே அமைந்துள்ளது ரங்கா ராம் பூங்கா. இந்தப் பூங்கா பயன்பாட்டில் இல்லாமல் பல வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. இந்த பூங்காவிற்குள் நிழல் தரும் மரங்கள் பல உள்ளது. அந்த மரங்களை அரசுஅனுமதியின்றி வெட்டப் படுவதாகவும், வெட்டப் படுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 11 மணியளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ரங்காராம் பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் க. வி. மணிமாறன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் தோழர் வழக்கறிஞர் மதிஅம்பேத்கார், வழக்கறிஞர் சேதுபதி, தோழர் மகேந்திரன், கம்பர், சிவா, தோழர் தமிழ்குமரன், தோழர் கணபதி, சாகுல் ஹமீது, மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.