நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோட்டூர் பேரூர் கழகத்தில் வெற்றிபெற்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பாராட்டு விழா மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டு விழாபாரமடையூர் கமலம் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையிலும் ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. அப்பொழுது அந்த நிகழ்ச்சிகள் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை கிழக்கு பகுதி மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ். திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் போன்றவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக -அலாவுதீன் ஆனைமலை.
