கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட காளியாபுரம், வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை ஆகிய பகுதிகளில் நேற்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது மாலை 4 மணி அளவில் காளியா புரத்தில் சட்ட எரிப்பு போராளி நரசிம்மன் நினைவு திடலிலும், மாலை 6 மணி அளவில் வேட்டைக்காரன் புதூரில் சட்ட எரிப்பு போராளி காளிமுத்து நினைவுத் திடலிலும், இரவு 7 மணிக்கு ஆனைமலையில் சட்ட எரிப்பு போராளி A.K. முஹம்மது அனிபா நினைவு நினைவு திடலிலும் நடைபெற்றது.
ஆனைமலை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் கிருஷ்ணன் அவர்கள் புதிய கல்விக் கொள்கை பற்றி பாடல் மூலம் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,
தோழர் நிர்மல் குமார் அவர்களும், தோழர் வெள்ளிங்கிரி அவர்களும் திராவிட சித்தாந்தத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர், இந்த தெருமுனை கூட்டத்திற்கு வே. ஹரிதாஸ் தலைமைதாங்கினார் ஆனந்த் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது மற்றும்துரைசாமி, சபரி, சந்தோஷ், கஸ்தூரி, சிவா, மணி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தந்தை பெரியார் உணர்வாளர்களும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.