கோவை சாரமேடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று கல்வி மேலாண்மை குழுவின் சார்பாக பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளியின் நிர்வாக ரீதியான ஆய்வு மற்றும் பெற்றோர்களின் குறைகளைக் கேட்டறிந்து பள்ளியின் கட்டுமானத்திற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஊக்க சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு ஆய்வாளர் மற்றும் அழைப்பாளராக கோவை 86 வதுவார்டு மாமன்ற உறுப்பினர்
E.அஹமது கபீர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஜாபர் தொண்டாமுத்தூர்.