கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் 70 படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஐ.ஜி ஸ்ரீ சத்தீஷ் சந்திர வர்மா மற்றும் கமாண்டர் ராஜேஷ்குமார் உத்தரவின்பேரில் கமாண்டர் ராஜேஷ், டோக்ரா ஆகியோர் தலைமையில் வந்த படை வீரர்கள் நேற்று மதியம் ஆழியார் அணைப் பகுதியில் இறங்கிபேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
இவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பிரபு, கோஷ் ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் இவர்களுக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காலி பாட்டில், டிரம் போன்ற மீட்பு கருவிகளை கொண்டு அவர்களை எப்படி மீட்பது? நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
ஆழியார் அணை நீரில் இறங்கிய படை வீரர்கள் மீட்பு படகில் சென்று தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவரை மீட்பது குறித்த ஒத்திகையை தத்ரூபமாக செய்து காட்டினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.