ஆனைமலை அடுத்த ஆழியார் அருகே ஓட்டகரடு என்னுமிடத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக எட்டு ஆடுகளை சிறுத்தைபுலி கொன்றது இதனையடுத்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் கூட்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவர் தோட்டத்தில் தோட்டத்திற்கு காவலாக கட்டி வைக்கப்பட்டிருந்த நாயே சிறுத்தைப்புலி அடித்து கொன்றது இதனையடுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சோதனை மேற்கொண்டதில் சிறுத்தைபுலி நடமாட்டத்திற்கு கான கால்தடம் இருப்பது.
உறுதிசெய்யப்பட்டது இதனை அடுத்து இப்பகுதியில் கேமரா மற்றும் கூண்டு விரைவில் வைக்கப்படும் என தெரிவித்தனர் இந்நிலையில் ஊர் பகுதிக்கு அருகே நாயை சிறுத்தை புலி கொன்ற விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால் புளியங்கண்டி பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன்,ஆனைமலை.