கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் கோட்டை மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நிகழ்வில் முக்கிய நிகழ்வான பறவைக் காவடி எடுக்கும் நிகழ்வு நேற்று மாலை ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் புளியங்கண்டியில் தொடங்கி ஆழியார் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் பறவைக் காவடியில் தொங்கியபடி கொட்டும் மழையில் நனைந்தபடி வந்தனர்.
அதேபோல் பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு நடனமாடியபடி வந்தனர் இந்த நிகழ்வைத் தொடர்ந்து இன்று சக்தி கும்பம் அழைத்தல் புதன்கிழமை மாவிளக்கு. அம்மன் திருக்கல்யாணம். போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது . நாளைய வரலாறு செய்திகளுக்காக. -அலாவுதீன் ஆனைமலை.