தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60).
கட்டிடங்க ளுக்கு சென்ட்ரிங் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்து வருகிறார்.
இவரை கோவையை சேர்ந்த 4 பேர் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அவர்கள், தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதை மற்றவர்களிடம் ரூ.1 கோடிக்கு விற்கலாம்.
ஆனால் நீங்கள் ரூ.30 லட்சம் கொடுத்தால் அந்த இரிடியத்தை கொடுப்பதாக மனோகரனிடம் கூறினார்கள்.
அதை நம்பி மனோகரன் ரூ.30 லட்சத்துடன் கோவைக்கு வந்தார்.
அப்போது அவரை தொடர்பு கொண்ட கும்பல், சிங்கா நல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜுக்கு வருமாறு கூறினர்.
அதன்படி அவர், ரூ.30 லட்சத்துடன் லாட்ஜுக்கு சென்றார். அங்கு அந்த கும்பல், இரிடியம் இருப்பதாக கூறி ஒரு பையை கொடுத்து வீட்டில் போய் எடுத்து பாருங்கள்,
இடையில் எங்கா வது நின்று இரிடியத்தை எடுத்து பார்த்தால் போலீசார் பிடித்துக் கொள்வார்கள் என்று கூறி உள்ளனர்
இதையடுத்து மனோகரன் ரூ.30 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் இரிடியம் இருப்பதாக கூறி கொடுத்த பையை வாங்கிக் கொண்டு புறப்பட்டு ஊருக்கு சென்றார்.
அங்கு அவர், அந்த பையை திறந்து பார்த்த போது உள்ளே செங்கல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் சிங்கா நல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து
இரிடியம் இருப்பதாக கூறி செங்கல்லை கொடுத்து ரூ.30 லட்சம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த முருகானந்தம், கண்ணப்பன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதில் 2 பேர் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.