சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம் ஆத்தூர் N.S. தியேட்டர் உரிமையாளர்
முத்து நடராஜன் அவரின் முயற்சியில் இங்கு 2015-ம் ஆண்டு பிரமாண்ட முருகனின் சிலை திறக்க பூஜை போடப்பட்டு 2016-ம் ஆண்டு முதல் திருப்பணி தொடங்கியது.
முத்து நடராஜன் சில வருடத்தில் மறைந்துவிட்டதால் அவரது மகனான
ஸ்ரீதரன் முழு மூச்சாக இத்திருப்பணியை தொடர்ந்து நடத்தி தற்போது கடந்த வாரத்தில் நிறைவடைந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உலகளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட திருமேனிகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் திருமேனி மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140 அடி. முத்து மலை முருகன் சிலை உயரம் 146 அடி மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் சிலையை வடிவமைத்த சிற்பி தியாகராஜன்தான் இந்த சிலையையும் உருவாக்கியிருக்கிறார். ஹெலிகாப்டரில் கும்பாபிசேக நீர் தெளிக்கப்பட்டது லிப்ட் மூலமாக சிலை உச்சிக்கு சென்று பக்தர்கள் பால் அபிசேகம் செய்ய ஏதுவாக ஏற்பாடும் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தனர் விழாக்குழுவினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை
ஆத்தூர் கோட்டாச்சியரும் சேலம் மாவட்ட காவல்துறையினரும் செய்தனர்.
செய்தியாளர்
-ச.கலையரசன் மகுடஞ்சாவடி.