இராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதமாக ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர்களை பிடிக்க இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசதயன் இவர்களின் உத்தரவுப்படி இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு பிரபு, அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி,உதவி ஆய்வாளர் மகாராஜன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில் 1) கணேஷ் வயது (28) த/பெ பழனி ஆற்காடு என்ற நபரை கடந்த 24- 3- 2022 தேதி கஞ்சாவுடன் கைது செய்து சிறையில் அடைத்ததும்,
அதேபோல் 2 )சரண் வயது (21) த/பெ பிரகாஷ் கத்தியவாடி ஆற்காடு என்பவரை கடந்த 5-4-2022ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திரு பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் மேற்படி இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் மீது ஆற்காடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-P. இரமேஷ் வேலூர்.