போத்தனூர் சாரதாமில் ரோடு பகுதியில் இருந்து அரசன் தியேட்டர் முன்பு உள்ள சாலை குறிச்சி பிரிவு வரை செல்கிறது. இந்த சாலையில் கே.டி.எஸ் கார்டன் என்னும் இடத்திற்கு அருகில் குப்பைகளை சரிவர கையாளாமல் குப்பைகளை சாலைகளின் ஓரங்களில் வீசிச் செல்கிறார்கள். இதனால் அந்த இடமே சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை வழியாக ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகிறார்கள்.
தற்பொழுது இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் மழை பெய்வதால் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது எனவே இதை உடனடியாக சரி செய்து தருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.