கோவை திருச்சி சாலையில் உள்ள குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் 55 வது வார்டிற்கு உட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மாநகராட்சி 61 வது வார்டிற்கு உட்பட்ட குளத்தேரி குளத்தை ஆய்வு செய்தார்
தொடர்ந்து அவர் கூறுகையில், “குளத்திற்கு செல்லும் கால்வாயில் குப்பைகள் நிறைந்திருந்தது. ஆய்வுக்கு பிறகு குப்பைகள் ஜெசிபி எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தின் நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.