கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில், தக்ஷா நிறுவனத்திற்க்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு உளள்து, ஷென்ஸ்ரே என்று அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பகுதியயில் தக்ஷா நிறுவனத்திற்ககு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது, இந்த நிலையில் பூங்காவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த குழந்தைகள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபொழுது, லக்ஷ்மன் என்ற 11 வயது, குழந்தையும் விளையாடியதாக கூறபடுகின்றது,
நேற்று தோட்ட வேலைகளுக்காக பூங்காவில் உள்ள மின்விளக்குக்காக பாதிக்கபட்டு இருந்த மின்சார ஒயரை, அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் வெளியே எடுத்துவிட்டதுடன், அதனை மீண்டும் பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார், மாலை வேளையில் மின்விளக்கை எரிய விட்ட பொழுது, அந்த ஒயரில் மின்சாரம் வருவதை அறியாத, குழந்தை அந்த ஒயரின் மேல் விழுந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், இது குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் இது குறித்து இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.