கோவை மாநகர காவல்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டிரோனை பறக்கவிட்டு கேமரா மூலம் கண்காணிப்பது அத்தியாவசியம் ஆகிறது. சென்னையில் இதுநடைமுறையில் உள்ளது. கோவையிலும் டிரோன் பிரிவு தொடங்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் டிரோன் பிரிவு தொடங்கப்படும். போக்குவரத்து நெரிசல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போராட்ட பகுதிகள் ஆகியவற்றை டிரோனை பறக்கவிட்டு கண்காணிக்கப்படும், சம்பவ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் கிழக்கு, மேற்கு, மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. புதிதாக போத்தனூரில் தெற்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் தனியார்கள் தங்களது கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் பகலிலும், இரவிலும் துல்லியமாக பதிவு செய்யும் 34 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, தொண்டு நிறுவனங்கள் மூலம் இளம்குற்றவாளிகளுக்கு அறிவுரை கூறி திருந்த வழி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை நகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.