சிங்கம்புணரி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சரை, ஜமாத் தலைவர் ராஜாமுகமது பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி மற்றும் பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், நத்தம் பேரூராட்சித் தலைவர் பாட்ஷா, மேலூர் நகராட்சித்தலைவர் யாசின்,
துவரங்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ், திமுக செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர அவைத்தலைவர் சிவக்குமார், தொழிலதிபர் RMS சரவணன், வழக்கறிஞர் துரைவேலவன், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் மனோகரன், குடோன் சுப்பிரமணி, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், பாஜக சிறுபான்மைப் பிரிவின் மாநில துணைத் தலைவர் சேக் தாவுத், பாஜக நகரத் தலைவர் வசீகரன்,
சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பின் சார்பில் கர்ணன், கம்பூர் செல்வராஜ், அன்வர்தீன், முபாரக், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்த ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் மகிழ்வுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.