கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூர் கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி அளவில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அறிந்த பொள்ளாச்சி தீயணைப்புத்துறையினர் புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயைகட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சிலிண்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை..