கோவை மாவட்டம் பொள்ளாச்சி
ஆனைமலை அருகே உள்ள சேத்துமடை அண்ணாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜா (41) இவர் மாநில தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று பல சாதனைகள் படைத்துள்ளார்.
இவர் அப்பகுதி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து அவர்களையும் சாதனை படைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார் கடந்த 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 5000 மீட்டர் மற்றும் ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மேலும் 15000 மீட்டர் போட்டியில்இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்..
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.