வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு,
நீலகிரி ,கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழை அல்லது
அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
நாளை முதல் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் மேலும் தமிழகத்தின் ஏனைய வட மாவட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்ககடலில் கடுமையானகாற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்
-கலையரசன்,மகுடஞ்சாவடி.