தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தடைவிதித்து கள்ளுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார் மேலும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆனைமலை ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், நகர செயலாளர் கோபால்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.
-M.சுரேஷ்குமார்.