69வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் அறிக்கை:
கோவை எச்ட்ஐவி,டிபி,கேன்சர் மற்றும் கடுமையான நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடையும் தருவாயில் உள்ள ஆதரவற்றோர்களுக்காக ஜீவ சாந்தி அறக்கட்டளையின் அன்பாலயம் பணிக்காக, தமிழ்நாடு மாநில சிறுபாண்மை ஆணைய தலைவர் மாண்புமிகு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சார்பில் ஒரு லட்சத்திற்கான காசோலையை காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளரும்,69வது வார்டு கவுன்சிலருமான சரவணகுமார் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சமீரனிடம் ஐஏஎஸ்அவர்களிடம் வழங்கினார்கள். ஒரு இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஜீவசாந்தி அறக்கட்டளை தோழர்களிடம் வழங்கினார்கள் என்பதை மகிழ்ச்சியோடும் பகிர்ந்து கொள்கிறோம்!
-ராஜேந்திரன்.