தாளமுத்துநகர் அருகே இருசக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்திய 2 பேர் கைது – ரூபாய் 35,600/- மதிப்புள்ள 1782 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் போலீசார் நேற்று சோட்டையன்தோப்பு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்க்கிடமான முறையில் வந்த 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி குமரன் நகர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் லெட்சுமணபெருமாள் (33) மற்றும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்த வீரபாகு மூர்த்தி மகன் ராஜேஷ் பாக்கியநாதன் (38) ஆகியோர் என்பதும் அவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தியதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் லெட்சுமணபெருமாள் மற்றும் ராஜேஷ் பாக்கியநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 35,600/- மதிப்புள்ள 1782 புகையிலை பாக்கெட்டுகளையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 75 E 5061 (Hero Glamour), TN 69 BC 5922 (Hero Pleasure) ஆகிய 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-துல்கர்னி உடுமலை.