பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலம் இரவு நேர, ‘பார்’ ஆக மாறியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி – கோட்டூர் ரோட்டில், ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆழியாறு, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என தினமும், ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
இந்நிலையில், இந்த பாலத்தை, ‘குடி’மகன்கள், திறந்தவெளி, ‘பார்’ ஆக மாறி வருகிறது. மது குடித்து விட்டு, பாட்டில்களை அப்படியே வீசிச் செல்கின்றனர். சென்டர்மீடியன் தடுப்புகள் மீது, காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து செல்கின்றனர். இதனால், விபத்து அபாயம் உள்ளது.
வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தை மது குடிக்கும் இடமாக, சிலர் மாற்றி வருகின்றனர். ஒரு சிலர் காரை நிறுத்தியும், பாலத்தின் தடுப்பில் அமர்ந்தும் மது குடிக்கின்றனர்.’குடி’மகன்கள், மதுபாட்டில்களை அப்படியே தடுப்பு சுவரில் வைத்துச் செல்கின்றனர். அவை கீழே விழும் போது வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.இது குறித்து, போலீசார் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தை ‘பார்’ ஆக மாற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.