ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும் இந்த தேசிய தினத்தை முன்னிட்டு ஆனைமலை வட்டம் அம்பராம்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சகர் பானுபைஜில் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெண்கள் நலன், அயோடின் உப்பு பயன்படுத்துதல், குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குதல், ஊராட்சிக்கு தரமான குடிநீர் வழங்குதல், போன்ற தீர்மானங்களை உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது மேலும் இக்கூட்டத்திற்கு ஒன்றிய பற்றாளர் மனோகரன், ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், வேளாண்மை குழு அதிகாரி சண்முகவேல்,கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.