கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையம் வாட்டரடேங்க் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். பாம்பு பிடிப்பதிலும் கால்நடைகளுக்கு நாட்டு மருத்துவம் பார்ப்பதிலும் கை தேர்ந்தவராக இருந்தாலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். இது தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி தனது வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து வினோத்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். சம்பவ இடத்திலே வினோத்குமார் கீழே சரிந்து உயிரிழந்துள்ளார் .
தனது கணவரை கொலை செய்துவிட்டதால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று நினைத்த மகாலட்சுமி இதில் தப்பிக்க யோசனை செய்து கணவர் தன்னைத்தானே கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடி உள்ளார். இருந்தபோதிலும் போலீசார் உரிய விசாரணையில் மகாலட்சுமி மாட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.