சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடைதுறை சார்பில்
ஏழ்மை நிலையில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கான பயிற்சி முகாமை முன்னாள் அமைச்சர் டிஎம்.செல்வகணபதி அவர்களின் ஆலோசனைபடி மகுடஞ்சாவடி வட்டார மேலாண்மை முகமை திட்ட குழு தலைவர் (அட்மா) திரு க.பச்சமுத்து அவர்கள் தலைமையேற்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.அன்பழகன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செய்து தமிழகத்தையே சாதனை மாநிலமாக மாற்றிவருகிறார். ஏழ்மை நிலையில் இருக்கும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என கால்நடை துறை சார்பில் கடந்த மானிய கோரிக்கையின் போது சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடு வளர்ப்பு பயிற்சியுடன் வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி அ.கண்ணன் பொன்.புஷ்பநாதன் ஏகாபுரம் ராஜா அய்யனார் அறிவழகன் ராஜ்குமார் பழனியப்பன் விசுவநாதன் அல்லிமுத்து ராஜாகவுண்டர் த.சுரேஷ்குமார் வேல்முருகன் பிரகாஷ் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
-கலையரசன் மகுடஞ்சாவடி.