தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டு வருகின்றது.
மிதிவண்டியில் செல்பவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் வெயிலின் தாக்கத்தால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
வருட வருடம் தன்னார்வலர்கள் வெயில் காலத்தில் ஆங்காங்கே நீர் பந்தல் மற்றும் நீர் மோர் பந்தல் போட்டு மக்களின் தாகத்தைத் தணித்து நன்மையை சம்பாதிக்கின்றனர். இந்த நீர் பந்தல் சேவையானது வருட வருடம் மக்களிடையே மிகவும் இந்த சேவை அதிகரித்து வருகின்றதை நம்மால் காணமுடிகின்றது. நல்லதை செய்வோம் நல்லதே எண்ணுவோம் நமக்கும் நல்லதே நடக்கும்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.