கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில், புளிய மரம் சாய்ந்ததால், 20க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி நகராட்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி அருகே, நகராட்சி வாகன நிறுத்துமிடம் உள்ளது.
குத்தகை அடிப்படையில் இந்த இடம் விடப்பட்டு, வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த வாகன நிறுத்தும் இடத்தின் அருகே, குடிநீர் மேல்நிலைத்தொட்டிஉள்ளது.
இந்த வளாகத்தில் இருந்த பழமை வாய்ந்த புளிய மரம், நேற்று மழைக்கு தாங்காமல் சாய்ந்தது.அந்த மரம் குடிநீர் மேல்நிலைத்தொட்டி வளாகத்தின் தடுப்பு சுவர் மீது விழுந்து, அருகே வாகன நிறுத்துமிடத்தில் உள்ள வாகனங்கள் மீது சாய்ந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்கள் சேதம் அடைந்ததால், வாகன உரிமையாளர்களுக்கும், ‘பார்க்கிங்’ ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.