கோவை மாவட்ட, பொள்ளாச்சி கருமாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பரமசிவம்,60. இவரை தாக்கிய, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாணிக்கம்,35, என்பவரை தாலுகா போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று போலீசார் அழைத்து சென்ற போது ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாலக்காடு ரோட்டில், கருமாபுரத்தில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்ற அவரை, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
போலீஸ் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணிக்கத்துடன், ஒரு போலீஸ் மட்டுமே சென்றதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.