கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த வாழைக்கொம்பு பகுதிக்குட்பட்ட தோட்டத்து சாலையில் ஆனந்தகுமார் யசோதா தம்பதியர் தங்கள் இரு குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.
இந்நிலையில் ஆனந்தகுமார் நேற்று வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த யசோதா திடீரென ஓடிச்சென்று அருகிலிருந்த கிணற்றில் குதித்துள்ளார் இதைக்கண்ட ஆனந்தகுமாரின் அம்மா கலாமணி அதிர்ச்சி அடைந்த நிலையில் பக்கத்து தோட்டத்தில் இருந்த ஹரி என்பவரை சத்தம் போட்டு வரவழைத்துள்ளார். ஹரி கிணற்றில் குதித்து யசோதாவை காப்பாற்றும் முயற்சியில் தோல்வியுற்றார்.
இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி யசோதாவை சடலமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே சமயம் ஆனைமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து யசோதா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன் கணவன் மற்றும் இரு குழந்தைகளுடன் இருந்த யசோதா திடீரென்று தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய RTO விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.