கோவை மாவட்டம் பொள்ளாச்சி திறந்தவெளியில் குப்பை கொட்டிய இனிப்பு கடைக்கு, நகராட்சி அதிகாரிகள், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில், நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் தாணுமூர்த்தி ஆய்வு மேற்கொண்டனர். திறந்தவெளியில், இனிப்பு கடை குப்பையை கொட்டுவதை கண்டனர். அக்கடைக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள், இனிப்பு கடைக்கு, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதே ரோட்டில் பழக்கடை பெட்டிகளை, போக்குவரத்து இடையூறாக வைத்திருந்ததால், 10 பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், “நகராட்சியில், குப்பையை திறந்தவெளியில் வீசக்கூடாது. துாய்மை பணியாளர்களிடம், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும், என, கடைக்காரர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறை மீறினால் கடைகளுக்கு முதல்கட்டமாக அபராதம் விதிக்கப்படும். அதன்பின், கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும். எனவே, கடைக்காரர்கள், குப்பையை திறந்தவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும்,'”என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V.ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.