போக்குவரத்து நெருக்கடியில் போராடும் சத்தி சாலையின் நிலை மாறுமா..? பொதுமக்கள் – வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு!!

 

கோவைக்கு வந்து செல்லும் முக்கிய பிரதான ரோடுகளில் சத்திசாலைஎன்கிற சத்திய மங்கலம் செல்லும் சாலையும் ஒன்று. கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் தூரம் ஏறக்குறைய 75 கிலோ மீட்டர் ஆகும். கோவை கணபதி வழியாக கடந்து செல்லும் இந்த சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான நகர்ப்புற குடியிருப்புகள் உள்ளன.
இது தவிர ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், சிறிய, பெரிய வணிக நிறுவனங்கள், சேமிப்பு கிடங்குகள், வங்கிகள், பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன.
அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் கோவையில் இருந்து கணபதி, சரவணப்பட்டி பகுதிகளை கடந்து சென்று விட்டால் ஆட்களோ, வாகனங்களோ, ஆட்கள் நடமாட்டமோ மிகவும் குறைவாகவே இருக்கும். போக்குவரத்து நெருக்கடியும் இருக்கவே இருக்காது.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்த பகுதியின் வளர்ச்சி பல மடங்காக பெருகிவிட்டது. அவிநாசி ரோட்டிற்கு அடுத்தபடியாக சத்திரோடு அதிகளவு போக்குவரத்து கொண்டதாகவே மாறி விட்டது.
இந்த நிலையிலும் சத்திரோட்டினை அகலப்படுத்தவோ, ஆக்கிரமிப்புகளை அகற்றவோ எந்தவொரு பெரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.

தற்போது தான் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சத்திரோடு சரவணம்பட்டி பகுதியில், காளப்பட்டி ரோடு சந்திப்பு, துடியலூர் ரோடு சந்திப்பு ஆகிய இரண்டையும் இணைக்க சுமார் 1.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டுவதற்காக சுமார் 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இந்தப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் அந்த பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது;
கணபதி டெக்ஸ்டூல் பாலம் இறங்கி வரும்போதே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து, சங்கனூர் ரோடு பிரிவு, மோர்மார்க்கெட் ஆவாரம்பாளையம் பிரிவு, கணபதி பஸ் நிலையம் பகுதி,
அண்ணாநகர், மணியகாரம்பாளையம் பிரிவு, கணபதி அத்திப்பாளையம் பிரிவு, பாரதிநகர் எப்.சி.ஐ ரோடு பிரிவு, ராமகிருஷ்ணா மில் மற்றும் விளாங்குறிச்சி ரோடு பிரிவு, தனியார் வணிக வளாகப்பகுதி என அனைத்துப்பகுதிகளும் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
எனவே மத்திய, மாநில அரசு நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் இந்தப் பகுதியில் உள்ள ரோட்டின் அகலத்தை அதிகப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை இருபுறங்களிலும் அகற்றவும் செய்ய வேண்டும்.

மேலும் அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மற்றும் பொள்ளாச்சி ரோடுகள் போல உயரடுக்கு மேம்பாலம் ஆங்காங்கே இறங்கும் வசதிகளுடன் அமைத்து தரவேண்டும்.
போக்குவரத்து போலீசார் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
லட்சக்கணக்கான மக்களின் பல லட்ச வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சத்திரோடு தன் சக்தியை இழந்து படுத்த படுக்கையான நிலையில் உள்ளது.
போக்குவரத்து நெருக்கடியில் போராடும் சத்தி சாலையின் நிலை மாறுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

நாளையவரலாறு செய்திகளுக்காக

கோவைமாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp