கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர்
குப்பை கிடங்கில் விபத்து ஏற்பட்டு பெண் பலி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தினந்தோறும் 100 வார்டில் இருக்கக்கூடிய 800 டன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
கோவையின் அனைத்து பகுதியில் இருந்து வரும் குப்பை ஆனது போத்தனூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு இங்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மண்புழூ உரம் தயாரிப்பு மற்றும் பல வழிகளில் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்குப்பை கிடங்கில் ஆண்கள் பெண்கள் என பலர் பணியாற்றி வருகிறார்கள். இன்று காலையில் குப்பை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு குப்பை கொட்ட வந்த டிப்பர் லாரி குப்பை கொட்டும் பொழது எதிர்பாராத விதமாக பொண் ஒருவர் குப்பை மத்தியில் சிக்கிக்கொண்டார். குப்பைக்கு உள் சிக்கிய பெண் மூச்சு தினரல் ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு போத்தனூர் காவல்துறை ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 99வது வார்டு கவுன்சிலர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். போத்தனூர் காவல் துறை ஆய்வாலர் இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–ஈசா, சையது காதர்.