ஆனைமலை முக்கோணத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு..!!
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள முக்கோணத்தில் அசோகா பார்மசிக்கு எதிரே உள்ள சாலை ஓரத்தில் உள்ள பாதாளச் சாக்கடை கால்வாயில் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு இவ்வழியாக செல்பவர்களுக்கு சிரமமாக இருந்து வந்தது இதை இப்பகுதியைச் சேர்ந்த 3வது வார்டு கவுன்சிலர் அபுதாகிர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.
இக்கோரிக்கையை ஏற்று முக்கோணத்தில் அசோகா பார்மசிக்கு எதிரே உள்ள சாலை ஓரத்தில் உள்ள பாதாளச் சாக்கடை கால்வாய் பகுதிகளை ஏப்ரல் 23ஆம் தேதி திங்கள்கிழமை நேற்று ஆனைமலை உதவி கோட்ட பொறியாளர் , சாலை ஆய்வாளர் மற்றும்
பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் போன்றவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் பொழுது கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் போன்றவர்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.