கோவை மாவட்டம்: இன்று 9-4-2022 மாஸ் கிளீனிக் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வெளியூர் பேருந்து நிலையங்களை தூய்மையாக வைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய கோவை மாநகராட்சி சுகாதார குழுவினர் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் உள்ள வெளியூர் பேருந்துநிலையங்களை “மெகா மாஸ் கிளீனிக்” மூலம் தூய்மைப்படுத்தும் பணியை கடந்த வாரம் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையத்தில் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பேருந்து நிலையங்களாக மாஸ் கிளீனிக் நடைபெறுகின்றது.
தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்களை ஆய்வு மேற்கொண்ட சுகாதார குழு தலைவர், அங்கு இருந்த ஊழியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சுகாதார மேலும், அங்கிருந்த டீ கடைகளில் சுகாதாரம் இன்றி உணவு பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்று கூறியவர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், உள்ளூர் மக்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் பயணிகளும் தூய்மையான மாநகராட்சியாக கோவை உள்ளது என பாராட்டும்படி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடத்திலும், தூய்மை பணியாளர்களிடத்திலும் அறிவுறுத்தினார்.
நாளை வரலாறு செய்திகளுக்காக
-சையது காதர்.