கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரசன்
மற்றும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மே மாத இறுதியில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். மலர் கண்காட்சியின் போது தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.
இதனிடையே ஏற்காட்டில் கோடை விழா நடத்துவதற்காக கடந்த வாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு முன்னாள் அமைச்சர் டிஎம்.செல்வகணபதி சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர்.சிவலிங்கம் சேலம் மேயர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர்
தொடக்க பணிகளை ஆய்வு செய்து பணிகளை முடக்கினார்கள்.
இன்று சேலம் வருகை தந்த அமைச்சர் கேஎன்.நேரு செய்தியாளர்களை சந்தித்தபோது வருகின்ற மே 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரையில் கோடை விழா தொடங்கும் என்று அறிவித்தார்
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களில் 3 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்குகின்றன. தற்போது தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
செய்தியாளர்
-மகுடஞ்சாவடி கலையரசன்.