கோவை மாநகர் உக்கடம் சரகம், உக்கடம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட உக்கடம் S.H ரோடு முத்து மாரியம்மன் கோவில் அருகில் கடந்த 22-04-2022ம் தேதி இரவு சுமார் 10.15 மணி அளவில் கொசு (எ) சந்தோஷ் குமார்(34) என்பவரை சுரேஷ்குமார் (எ) சுருக்குளி(26) மற்றும் முத்துப்பாண்டி (23) ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களது நண்பர்களின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்தது சம்பந்தமாக சுண்டக்கடலை (எ) சுரேஷ் என்பவர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் பேரில் உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரிகள் இருவரும் கடந்த 29-04- 2022 ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறார்கள்.
இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள படியால் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார் அவர்களின் உத்தரவுப்படி கோவை மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு திரு. ஜெய்சந்திரன் மற்றும் உக்கடம் சரக காவல் உதவி ஆணையர் அவர்களின் பரிந்துரையின் பேரில் தடுப்புச் சட்டத்தின்(தமிழ்நாடு சட்டம் 14/1982)3ம் பிரிவை சார்ந்த 1ம் உட்பிரிவின் கீழ் குண்டர் என வகைப்படுத்தப்பட்டு 26-05-2022ம் தேதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப் படுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.