கோவை இளைஞர்களுக்கு ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!!

த்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து நகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் அந்தந்த நகரங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக தற்போது ஆட்களை தேர்வு செய்து வருகிறது. பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறவும், அரிய வேலைவாய்ப்பினைப் பெறவும், மாநகராட்சிக்கு ஆலோசனை வழங்கவும் ஸ்மார்ட்சிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான நிபந்தனைகள் என்னவென்றால் விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

Visual Communication
B.Arch/M.Arch
B.E/B.Tech(IT)
B.E/B.Tech(Civil)
MBA/PGDM in Event Management
MA (Tamil/English) Communication
இதற்கான கால அவகாசம் ஆறு மாதங்கள். பயிற்சிக்கான ஊக்கத்தொகை 10,000. இந்தியா முழுவதும் உள்ள வாய்ப்புகளை ஒரே மேடையில் ஒருங்கிணைத்து நகர்புற நிர்வாகத்தில் விண்ணபிக்க இந்த திட்டம் அனுமதி அளிக்கிறது. இத்திட்டத்தில் சேர விரும்புவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல்-24. மேலும் விவரங்களுக்கு http://internship.aicte-india.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp