தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக
பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்திலும் இதே தொடர்கிறது காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மாலையில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இரவு பலத்த மழை பெய்கிறது வெள்ளிக்கிழமை காலை வரை சாரல் மழை பெய்தது.
தொடா் மழை காரணமாக கோடை வெயில் தணிந்து பனிக்காலம் போல நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 79 மி.மீ. பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் தடை ஏற்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையத்தினர் கூறுகையில் முன்கூட்டியே பருவமழை வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்
-மகுடஞ்சாவடி கலையரசன்.