கோவை மாவட்டம் சுந்தராபுரம் சாரதாமில் ரோடு பகுதியான ராஜா முத்தையா நகர் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த மக்களில் பலர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் தினமும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துவோராகவும் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் உள்ள உப்பு தண்ணீர் குழாய்களில் சரியான நேரத்திற்கு தண்ணீர் வருவதில்லை என்றும் அப்படியே தண்ணீர் வந்தாலும் தேவைக்கேற்ற அளவு கிடைப்பதில்லை என்றும் அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சரியான பதில் கூற மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது என்றும் தண்ணீர் கிடைக்காமல் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-விக்னேஷ் பாபு.