கோவை அரசு மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் இருந்த காலகட்டத்தில் இவர்களது பணி அளவிடற்கரிய பணியாக இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஜின் கோய்ட் (ZIN COIT) என்ற சத்து மாத்திரைகளை மருத்துவமனை முதல்வர் நிர்மலா வழங்கினார்.
அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.